என்பாகள்/சுரேஷ் ராஜகோபால்

வாழை மரம் குலை தள்ளியது
காழ்ப்புணர்ச்சி வீணாகச் சண்டையைத் தூண்டும்
தாழ்வு மனப்பான்மை இப்போது வேண்டாமே
வாழ நினைத்தால் வாழலாம். 1

அவன் சாப்பிடாமல் தூங்க முனைந்தான்
இவன் வயிறு முட்டச் சாப்பிட்டான்
அவனுக்கும் இவனுக்கும் ஏன் மாற்றம்
பூனை நல்ல பூனை 2

காட்டில் யானைக் கூட்டம் நின்றன
நாட்டில் தலைவருக்குத் தொண்டர் காத்தனர்
வீட்டில் பணமில்லை அடுப்பில் பூனை
பூனை நல்ல பூனை 3

புலிகளைப் பெரிய எதிரியாக ஏற்பதில்லை
எலிகள் என்றும் பம்முவது பூனையிடமே
பலியாகும் நிரந்தர தியாகிகள் அதனால்
பூனை நல்ல பூனை 4

நமக்குப் பூனை
குறுக்கே வந்தால்
கெட்ட சகுனம்
பூனையை உண்பவனுக்கோ
அதனைக் கண்டால்
நாக்கில் எச்சில் ஊரும்
அவன் பூனைக்குக்
குறுக்கே வந்தால்
பூனைக்குச் சகுனம் சரியில்லை

சுரேஷ் ராஜகோபால்