ஆட்டோ ஓட்டுனர்/கலாவதி பாஸ்கரன்

அது ஒரு டிராபிக் சிக்னல்!
நின்ற எங்கள் வண்டியின்
இடது புறம் சர்ரென்று வந்த
ஒரு ஆட்டோ, அதில் இருந்த
ஓட்டுனர் இரட்டை நாடி
இளம் பெண் ,
இறுக்கமான பச்சை நிற பேண்ட்,
கறுப்பு டீ ஷர்ட்
மேல் ஓட்டுனர் கோட்
தலை முடி அடர்த்தியாக
ஒட்ட இரு புறமும் பாப்
சட்டென்று என்னை பார்த்து
பளிச் புன்முறுவல்
நானும் முறுவலித்தேன்
பெருமிதம் எனக்கு
பெண்கள் எந்த வேலையும்
செய்கிறார்கள் ,
தன்னம்பிக்கையுடன்!
என் பெருமையின் வாழ்வு
சில நொடிகள் தான்
வலப்புறம் காரை தட்டும் சத்தம்
திரும்பிய நான் பார்த்தது
வேறு ஒரு இளம் பெண்ணை,
குழந்தையுடன் நின்ற அவள்
தன் வயிற்றைக் தட்டி
கையை நீட்டினாள்.
மனம் கனத்தது.

2 Comments on “ஆட்டோ ஓட்டுனர்/கலாவதி பாஸ்கரன்”

Comments are closed.