
(1)
பிறப்பு நம்கையில் இல்லை பிறகு…
இறப்பு நம்கையில் இல்லை அதனால்…
வாழ்வது நம்கையில் உண்டு
உணர….
இதற்கினி ஞானம் எதற்கு….?
(2)
தெரிந்துதான் வாக்கினை அளித்தோம் பின்னர்…
பெற்ற பணத்திற்கு ஒருநியாயம்
உரைத்தோம் …..
கொடுத்ததை கையூட்டாய்க் கேட்டால் கோபம்…
இதற்கினி ஞானம் எதற்கு….?
(3)
காதலித்த போது சொன்ன பொய்கள்….
மறக்கவில்லை இன்றுநீ ஆயினும் அன்பே…
பொய்களில்லாத காதலில்லை
புரிந்து கொள்….
இதற்கினி ஞானம் எதற்கு…?
(4)
கவிஞர் வீட்டு வாசலில்
கால்வாய்…. உடைப்பு காத்திருக்கிறார் சீராக…நாளும் பாவம்…
அரசாங்க வழிமுறை ஆமைக்கு அண்ணன்….
இதற்கினி ஞானம் எதற்கு…?
(

கால்வாய் உடைப்பு சரி செய்ய காத்திருப்பது,காதலித்த போது சொன்ன பொய்கள்,அரசியல்வாதிகளின் ஊழல்,திருமணத்திற்காக காத்திருப்பது வலி.