
(1)
காதறுந்த ஊசியும்
கடைவழி வாராது
எனத் தெரிந்தும்
திரவியம் தேடும்
மனிதற்கு, விரயமே
உரைக்கும் சொல்லும்
இதற்கினி ஞானம் எதற்கு?
(2)
அம்பலவாணன் அகத்திருந்து
அம்மையுடன் நின்றாட
சிவத்தில் சிந்தை
தெளிந்தேன் நான்.
செந்தழலான் கண்நோக்குடன்
ஏனென கேட்பின்
இதற்கெனி ஞானம்
எதற்கு?
(3)
நேற்றைய பொழுதை
சற்றும் நினையாமல்
இன்றைய பொழுது
இனிதே நிறைவுற்றிருக்க
நாளை பொழுது என்றும் நன்றே!
இதற்கினி ஞானம் எதற்கு?
(4)
வெண்ணிலவு தீ என சுட்டாலும்
தண்ணிலவு பனி என குளிர்ந்தாலும்
நாதன் வரும் நாள் இன்றில்லை
இதற்கினி ஞானம் எதற்கு?
(5)
சர்க்கரையின் அளவு குறைந்தாலும், கூடினாலும்,
எனக்கு அவள் வேளைக்கும் தரும்
கம்பங்கூழ் கேப்பைக்களி குறையும்,கூடும்
இதற்கெனி ஞானம் எதற்கு?
25-1-2023

கேப்பைக்களி,காதலுக்கான காத்திருப்பு வலி