
நல்லெண்ணம் என்றும் தீங்கு தராது
உழைப்பு ஒன்றே நோய் அறுக்கும்
விதைப்பது எதுவோ அதுவே விளையும்
இதற்கினி ஞானம் எதற்கு.
********
மேகம் பழுத்திடப் பெருமழை பெய்யும்
மோகம் கொழுத்திடக் கேடுறும் எல்லாம்
தாகம் பெருகிட வாழ்வு சுவையாகும்
இதற்கினி ஞானம் எதற்கு.
*********
கத்தரிக்காய் செடியில் மாங்காய் காய்க்காது
காய்க்கும் யாவும் பழுப்பது கிடையாது
கிடைக்கும் எல்லாம் வாழ்வில் இனிக்காது
இதற்கினி ஞானம் எதற்கு.
***********
அரசன் மக்களைக் காப்பது கடனே
ஆண்டி பிச்சையில் உண்பது கடனே
அவரவர் வாழ்வைச் சுமப்பது கடனே
இதற்கினி ஞானம் எதற்கு.
***********
சர்க்கரை நோயல்ல நோயைத் தீர்க்காது
வாயை அடக்கிட அடங்கும் சர்க்கரை
அவரவர் மனமே நலத்தின் மருந்தகம்
இதற்கினி ஞானம் எதற்கு.

அனத்தும் உண்மை! உண்மை தவிர வேறில்லை!
இது அறிய ஞானம் எதற்கு?
சர்க்கரை நோய் வலி