திருமண என்பா /ஹரணி

மஞ்சள் அரிசி எல்லோர் தலையிலும்
மணமக்கள் தலையில் விழவே இல்லை
குப்பையை உதறுவது போல சிலர்
வாயால் வாழ்த்த லாம் போதும்.

*******

சாப்பிட விடாமல் பின்னால் நின்றபடி
சாப்பிடுபவர் சங்கடம் உணர்வது இல்லை
பதினொரு மணிக்கே பந்திக்குப் பறத்தல்
காத்திருப்பது கண்ணியம் பண்பு.

********

சேர்ந்து வந்தவர்கள் வரிசை காக்கிறார்கள்
விட்டு நின்று போவது என்பது
ஆளுக்கொரு தாம்பூலப்பை வாங்கிய திறமை
வாங்காதவர் கவலை பாவமே.

********

நிதானமாய் வந்து கல்யாணம் கவனித்து
மேடைக்குப் போய் அட்சதை தூவி
இருப்பதைக் கொண்டு வயிற்றை நிரப்பி
வாழ்த்துங்கள் நிறைவாய் நன்றே.

One Comment on “திருமண என்பா /ஹரணி”

  1. சாப்பிடுவரின் பின்னால் நிற்பது,தாம்பூல பை கிடைக்காதது,மஞ்சள் அரிசியை உதறுவது வலி

Comments are closed.