இந்த மழையில்

ஒரு காக்கை தென்னையில் உட்கார்ந்து கொண்டு சிறகுகளைக் கோதி
விடுகிறது.
பக்கத்து இல்லின் தகரக் கொட்டகையில் விழும் நீரின் சத்தம் பயமுறுத்துகிறது
பின்னாலுள்ள மனைவி குடைப்பிடிக்க கணவன் வண்டி செலுத்துகிறான்
சிட்டுக்குருவிகள் அறியாச் சிறுவர்களாக அங்குமிங்கும் பறந்து நனைந்து திரிகின்றன.
கருமமே கண்ணாயிருக்கும் பால்காரர் நனைந்து கொண்டே பால் ஊற்றுகிறார்.
காலையில் நல்ல வெயில் அடித்ததால் மழை வராது என்றெண்ணிப் பள்ளிசென்ற மாணவரின் மிதிவண்டி வேகமாக விரைகிறது.
நாம் நினைப்பதில் எதுதான் நடக்கிறது என்று ஓலமிடுகிறான்
ஒரு கவிஞன்.
—————++++++++

மிக அருமை வாழ்த்துக்கள் தோழர்
காக்கையும்,சிட்டுக்குருவியும் இதம்.