தவழும் பூ/மஹேஷ்

நேற்றைய
கனவில்
வந்தாள்
அம்மா

அகல் வெளிச்சத்தின்
மங்கலில்
திருப்புகழ்
படித்துக்
கொண்டிருந்தாள்..

காலன்
எனை
அணுகாமல்
உனதிரு
காலில்
வழிபட
அருள்வாயே

எங்கே போனாய்
இவ்வளவு நேரம்?

கேட்டுவிட்டு
படிக்கலானாள்..

புகையும்
அனலும்
மண்டி
மேலெழ

அம்மா
கனவில்
நானா
என்
கனவில்
அம்மாவா?

இதையும்
யார்
கனவில்
யார்
கேட்பது?

One Comment on “தவழும் பூ/மஹேஷ்”

Comments are closed.