திருப்பூர் கிருஷ்ணன் பிறந்தநாள்/அழகியசிங்கர்

அவருக்கு மனைவியும் நானும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவர் இலக்கிய நண்பர் மட்டுமல்ல குடும்ப நண்பரும்கூட.

எங்கள் குடும்பத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டிருக்கிறார்.

இலக்கிய நிகழ்ச்சிகளில் நானும் அவரும் சந்திக்காமல்

இருந்ததில்லை.

ஒரு நிகழ்ச்சி இன்றும் கூட பசுமையாக இருக்கிறது.

சிசு செல்லப்பாவை ஒரு கூட்டத்திற்கு சா.கந்தசாமியும் பிரசன்னாவும்

 ஏற்பாடு செய்திருந்தார்கள். 

திருப்பூர் கிருஷ்ணன்தான் செல்லப்பாவைக் கூட்டத்திற்கு அழைத்துக் கொண்டு வந்தார்.  அப்போது மழை. நான் டூ வீலரில்

 மழையில் நனைந்தபடி வந்து கொண்டிருந்தேன்.

கூட்டம் நடக்குமிடத்திற்குப் போனபோது எங்களுக்குத் திகைப்பு. டிரைவரையும்

 சேர்த்து மொத்தமே ஆறு பேர்கள்தான் வந்திருந்தோம்.  திருப்பூர் கிருஷ்ணன், சிசு செல்லப்பா, சா.கந்தசாமி, பிரசன்னா, நான், டிரைவர்.

இப்படி ஒரு கூட்டத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் நடத்தும் கூட்டத்திற்குக் குறைந்தபட்சம் 15 பேர்களாவது வருவார்கள்.

அன்று சிசு செல்லப்பாவிற்கு என்னாயிற்று

 என்று தெரியவில்லை. எதிரில் உட்கார்ந்திருந்த என்னைத் திட்ட ஆரம்பித்தார்.  என்பத்திரிகை விருட்சம் பட்டுப் போகவேண்டும் என்று சபித்தார்

வயதானதால் அவருக்கு என்னமோ ஆகிவிட்டது என்று நினைத்துக் கொண்டோம். மேலும் அவருடைய சுதந்திர தாகம் என்ற 3 பாகங்கள் கொண்ட நாவலுக்கு அப்போது லைப்ரரிஆர்டர்

 கிடைக்கவில்லை என்ற கோபம்கூட இருந்திருக்கும். ஆனால் இரண்டு நாட்கள் கழித்து சி.சு செல்லப்பா எனக்குப் போன்

 செய்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். இதுதான் செல்லப்பா.

அன்றைய நிகழ்ச்சிக்குக்

 கிருஷ்ணன் வந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது. கிருஷ்ணன் எந்தச் சமயத்திலும் எப்போதும் நிதானம் இழக்கமாட்டார்.  கொரானாவின்

 போது அவருடைய மகனுடைய இழப்பு துயரமிகுந்த சோகக் கதை. அவருடைய அசாத்தியமான மனத்திட்பம் அவரைக் காப்பாற்றி விட்டது. 

அவருக்கு எங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துகள்.