இனியும் என்ன செய்வது!/உமா பாலு

1.

காசு கௌரவம் பதவி பார்த்தாச்சு
பேரப் பிள்ளைகள் பேணி வளர்த்தாச்சு
சும்மா இருப்பது சுகம் என்றுணர்
இனியும் என்ன செய்வது!

2.

கொண்டு வந்ததெல்லாம் குறையின்றி
கொடுத்தாச்சு
புதிதாய் எதுவும் சேர்க்க விழைவில்லை
ஆனாலும் பாத்த்தில் படியும் தூசி
இனி என்ன செய்வது?

3.

அம்மாவின் பொம்மை

அம்மா எனக்கொரு பொம்மை தந்தாள்
பொம்மையுடன் என் பயணம் தொடர்ந்தது
போதும் என்றாகியும் புக அவளில்லை
இனி என்ன செய்வது?

4.

காடுமலையழித்து வீடு கோவில் கட்டு
யானைகள் புலிகள் உணவு தேடி
ஊருக்குள் வந்துனை அழிக்கத்தான் செய்யும்
இனி என்ன செய்ய?

2 Comments on “இனியும் என்ன செய்வது!/உமா பாலு”

Comments are closed.