
மெய்நிகர் கூட்டத்தில்
எவரோ கேட்டார்,
எதைச் சொல்வீர்
இந்த நூற்றாண்டின்
வார்த்தையென?
கரை புரண்டோடும்
வெள்ளமாய் எல்லாவற்றையும்
இழுத்துச் செல்லும்
இந்த வாழ்க்கை.
ஒதுங்க ஒரு மரக்கிளை
கிடைத்தாலும் போதுமென
இளைப்பாறத் துடிக்கிற மனசு.
இரு வார்த்தைகள் தோன்றுகின்றன.
“ தவிர்க்கவியலாதபடி ..”
“ என்ன செய்ய ? “.
ஒரு வார்த்தை தேர்வு
செய்யச் சொன்னால்,
தவிர்க்கவியலாதபடி முன் வைக்கிறேன்,
“ என்ன செய்ய ? “.
- - 19.11.21
