பத்மினி பட்டாபிராமன் அவர்களின் மலைச் சரிவில் ஒரு டீக்கடை.சிறுகதை/கோ.வைதேகி

கதைக் கருவால் உருவான கதை, கதாபாத்திரங்களால் உருவான
கதை, நிகழ்வுகளால் உருவான கதை என மூன்று வகைகளுள் அடங்கும்.
சிறுகதைப் பிரிவுகளில் இக்கதை நிகழ்வுகளால் உருவான கதை எனும்
மூன்றாம் பிரிவுக்குள் அடங்கி விடுகிறது.
இயல்பான நடையில் வால்பாறையின் மலைச் சரிவில்
அமைத்திருக்கும் டீக்கடை. கிரீன் ஹீல்ஸ் டீ எஸ்டேட் உரிமையாளர் தன்
எஸ்டேட் டீத்துளை பிரோமோட் செய்ய டீ எஸ்டேட் பக்கத்திலேயே
அமைத்துள்ள டீக்கடை. அதில் டீ போடும் வேலை செய்யும் பெண்மணி
ரெங்கம்மா கணவனை இழந்தவர். அவளுக்கு சதீஷ் என்றொரு மகன்.
பெற்றவள் கஷ்டம் உணர்தவன் அப்பா உயிரோடிருந்த வரை ஒரே
பிள்ளை என கடன் வாங்கியாவது அவன் கேட்டதையெல்லாம் வாங்கித்
தந்து விட தந்தையின் இறப்புக்குப் பின்னும் அம்மாவிடம் எப்படியோ
பேசி சமாளித்து தனக்கான பணத்தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு
அம்மாவின் உழைப்பை வீணாக்கிக் கொண்டிருந்தான். எந்த வேலையும்
நிலைத்து நில்லாமல் இருந்ததோடு சிங்கபூர் சென்று வேலை செய்ய
எஜெண்டிற்கு பணம் கொடுக்க ஏற்பாடு செய்யும்படி அம்மாவை
நச்சரித்துக் கொண்டிருந்தான். இவையெல்லாம் ரெங்கம்மாவிற்கு பெரும்
கவலையளிப்பதாய் இருந்தது.
இந்நிலையில் முதல் நாளிரவு மழையை முன்னிட்டு கடையை மூட
எத்தனிக்கையில் யாரோ விட்டுச்சென்ற பணப்பையைக் கண்டெடுக்கும்
ரெங்கம்மா மகன் அப்பையைப் பற்றி அறிந்துகொள்ளும் முன்
உரியவரிடம் சேர்த்து விட நினைக்கிறாள். அவள் யோசனையில் முதல்
நாள் டீக்குடிக்க வந்த சினிமாக்காரர்கள் அந்த பைக்கு சொந்தகாரர்கள்
எனத் தெளிந்து, அடுத்த நாள் அவர்கள் வருகையை எதிர்பார்த்தபடி
கடையைத் திறந்து காத்திருக்கிறாள்.
அப்போது சதீஷ் தன் சைக்கிளின் பின்னே முரளி என்பவனை அமர
வைத்து அழைத்து வருகிறான். அவனும் அழுதுபுலம்பியபடி
அந்தப்பணப்பை தொலைந்த விதத்தைக் கூரி தனக்கு அதில்

தொடர்பில்லையெனினும் தன்னை தொடர்புபடுத்தி அடிப்பதாகவும்
டைரக்டர் போலிசுக்கு தகவல் தரப் போவதாகக் கூறுவதாகவும் அவ்வாறு
நடந்தால் தன் வாழ்க்கையே பாழாகிவிடுமென அழுகின்றான்.
பணப்பைக்குரியவரியவன் வந்ததாக எண்ணும் ரெங்கம்மா
பணப்பையை முரளியிடம் தருகிறாள். அவனும் மகிழ்ந்து நன்றி
சொல்லியபடி வாங்கிக் கொள்கிறான். இத்துடன் இக்கதை முற்றுப்
பெற்றிருந்தால் இது ஒரு சாதாரண சிறுகதையாக பத்தோடு
பதினொன்றாகி விட்டிருக்கும்.
ஆனால் கதை இங்கு தொடர்கிறது. முரளியை விட்டுவிட்டு
வருவதாகச்சொல்லி சதீஷ் அவனை சைக்கிளில் ஏற்றிச் செல்லும்போது
தன் நடிப்பு பற்றி பெருமையாக பேசியபடி அதற்கான கூலியை
கேட்கிறான் முரளி. ஆனால் இரண்டு ஆயிரம் ரூபாய்களை மட்டும் அந்தப்
பணப்பையிலிருந்து எடுத்து நீட்டிவிட்டு முதல் நாள் தன்னைக் கண்டு
அம்மா பணப்பையை ஒளித்து வைத்தது முதல் அது சினிமா
கம்பெனியுடையது என உணர்ந்து முரளியை ஆளாக்கி திட்டம் தீட்டி
நடிக்க வைத்து அம்மாவை ஏமாற்றி பணப்பையை பெற்றதுவரை
செயலாற்றியது தானே என்று கூறி உனக்கு இதுவே அதிகம் என்று கூறி
இதை எடுத்துக் கொண்டு கோயம்புத்தூருக்கு சென்று விடுமாறு
கூறுகிறான் சதீஷ். இத்துடன் கதை முடிந்திருந்தால் படிப்பவர்களுக்கு
சற்றேறக்குறைய ஒரு திகைப்பு விரவி இருந்திருக்கும். அவ்வாறு
முடியாமல் அந்தப் பணம் உண்மையானது இல்லையென்றாலும்
தவறுதலாய் அது தவறவிடப்படவில்லை என்றும் முடிகின்றார்
கதாசிரியர்.
சிறுகதையோ, கவிதையோ, நாவலோ, திரைப்படமோ எந்தவொரு
படைப்பும் மன உணர்வுகளை அசைத்தால் மட்டுமே அது சிறந்த
படைப்பாகும். அந்த வகையில் இச்சிருகதை படித்து முடிக்கும் போது
ரெங்கம்மாவின் நிலையை எண்ணி மனம் கனக்கும் வலியுடன்
உணர்வுகளை அசைத்து இப்படைப்பை ஒரு சிறந்த படைப்பாக்கி
விடுகின்றார் கதாசிரியர் என்றால் அது மிகையில்லை.

2 Comments on “பத்மினி பட்டாபிராமன் அவர்களின் மலைச் சரிவில் ஒரு டீக்கடை.சிறுகதை/கோ.வைதேகி”

Comments are closed.