
அன்று
மிக்ஸி இல்லை
கிரைண்டர் இல்லை
கேஸ் இல்லை
ஆட்டுக்கல்லில்
அரைத்தமாவை
விறகடுப்பில்
வேகவைத்து
அம்மிக்கல்லில்
அரைத்த சட்னி
தொட்டுக்கொண்டே
தின்றோம் இட்லி
ஒவ்வொருநாளும்
ஒவ்வொரு சுவையில்!
இன்று
மிக்ஸி உண்டு
கிரைண்டர் உண்டு
கேஸ் உண்டு
குக்கர் ஓவன்
எல்லாம் இருந்தும்
பசிவந்ததும்
பட்டனைத் தட்டினேன்
சுவிகியில் நான்கு
இட்லி வேண்டி
தர மேலாண்மைச்
சான்றிதழ் உளதால்
நேற்றைய சுவைதான்
என்றும் அதற்கு!
எளிதில் கிடைக்கும்
எதுதான் இனிக்கும்?
கடின உழைப்பின்
பலனே சுவைக்கும்!
—

அழகாகச் சொன்ன உண்மை
மிக நன்று
ஆட்டிக்கல்லில் அரைத்தவை இதம்,மிக்ஸி,கிரைண்டர் வதை.