
- மடியில்
உட்கார்ந்து
கொண்டிருந்த
பேரனின்
சுமையைத்
தாங்க முடியவில்லை - நியாயமா?
என்று கேட்டேன்
நியாயமில்லை
என்று சொன்னவன்
என்னை நிமிர்ந்து பார்த்தான் - எல்லோரும் கவிதை
எழுதுகிறார்கள்
ஆம்.
எல்லோரும் கவிதை
வாசிக்கிறார்களா - சாப்பிட
உட்கார்ந்தேன்
இலையில்
விழுந்தவை
என்னிடம்
பேச ஆரம்பித்தன - ஒரு
நீண்ட தெருவில்
நடந்து
கொண்டிருந்தேன் - கல்யாண மண்டபத்தின்
முன்
செருப்புகளின்
குவியல் - ஜன்னலைத்
திறந்தேன்
காற்று விர்ரென்று
அடித்தது
