துரிதக் கவிதைகள்/மீனாட்சி சுந்தரமூர்த்தி

1.உச்சி வெயில் பளீரென
அடித்தது.

2.நெற்றி வியர்வை நிலத்தில்.

  1. உரிமை உரிமை மேடையேறி முழக்கம்

4.பேசாதே இல்லத்தில்
ஒடுக்கம்.

  1. வறுமை ஒழிப்பு மாநாடு.
    மாடு மேய்ந்தது சுவரொட்டி.
  2. ஓலமிட்டது அழுகுரல்
  3. ஓடிவந்தது
    அக்கம்பக்கம் ,
  4. கண்டது
    தொலைக்காட்சி.
  5. கல்யாண விருந்து கனத்தது குப்பைத் தொட்டி.
  6. தெருவோரம் பசிமயக்கம் – பிச்சைக்காரன்

.