
(1)
துரித ரயில் இன்று ஒருமணி தாமதம்.
(2)
ஊரை சுத்தும்
பேர் சொல்லும் பிள்ளை.
(3)
ஆட்டை காணவில்லை
நாளை பக்ரித்.
(4)
பொங்கும் சினம்
மங்கும் புத்தி.
(5)
வம்பர்க்கு எளிது
ஜிலேபி சுற்றல்.
(6)
குத்தால குளியலுக்கு
பத்தாது பத்து இட்லி.
(7)
மல்லி வாசமும்
முன் மாலை நிலவும்.
(8)
நாத்தனார் சொல்
தித்திக்கும்; என்று?
(9)
அவர் இன்று கடுப்பு
நாளை பொழுது?
(10)
அரைக்காமல் ஆகுமா;
அமாவாசை பலகாரம்?
(11)
சாப்பாடு தீர
சமையல் சந்தோஷம்
(12)
கண்ணதாசன் படிப்பது எளிது;
கற்பது கடினம்.
(13)
சுதந்திரமாக நடந்தேன்;
அவர் ஊரில் இல்லை.
(14)
அட்டிகையின் நடுக்கல்;
என் நாட்டுப்பெண்.
(15)
ஆரிய கூத்தாடினாலும்
காரியத்தில் கண்.
(16)
டிக்கட் கிடைக்கவில்லை
வருவதற்கு இல்லை; அப்பாடா!
(17)
பொங்கினா இட்லி
பொங்காட்டா தோசை.
(18)
காது கேட்காதது
பாதி சௌகரியம்.
(19)
அஞ்சாப்பு வாத்தியாரிடம்
இன்றும் பயம்.
(20)
பொன்னை அரைத்து
புளியிட்டாலும்;
அமைந்தால் தான் ருசி.
(21)
சாப்பாடு தீர
சமையல் சந்தோஷம்!
22
அரைக்காமல் ஆகுமா;
அமாவாசை பலகாரம்?
23
மனதின் அமைதி
அலையின் ஓசை
24
தேனொழுகும் பலாவும்
குத்தால குளியலும்
