துரிதக் கவிதைகள்/கே சங்கரநாராயணன்

1.

செருப்பு தூங்குகிறது
சபரி விரதம்.

2.
ஊதுபத்தி மணத்தது
சாம்பலை விடுத்து.

3.
காக்கையைத் தேடினேன்
வந்ததோ குயில்.

4.
எழுந்தேன்
விழுந்தது கைபேசி

5.
கால் நின்றது
கைபேசி அடித்தது.

6.
சாப்பாடு வரவில்லை
தண்ணீர் குடித்தேன்.

7.
நடந்தோம் நானும் தெரு நாயும்

8.
முட்டி வலித்தது
முடங்கினேன்.

9.
பாடினேன்
காத்து வந்தது

10.
கதவு க்ரீச் க்ரீச்
எண்ணெய் போடணும்.

11.

மின்சார பில்
மெழுகுவர்த்தியில்
பார்த்தேன்.

2 Comments on “துரிதக் கவிதைகள்/கே சங்கரநாராயணன்”

Comments are closed.