கல்யாண்ஜி கவிதை

‘எப்படி இருக்கீங்க?’
என்ற கேள்விக்கு
சத்தி பொய் சொன்னார்
‘நல்லா இருக்கேன்’.
‘நீங்க எப்படி இருக்கீங்க:ஐயா?’
சத்தி பதிலுக்குக் கேட்டார்.
‘நல்லா இருக்கேன் சாமி’
நான் பொய் சொன்னேன்.
இப்படித்தான் நாங்கள்
ரொம்ப ரொம்ப
உண்மையாக இருக்கிறோம்.