ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய/வே. கணேசன்

நடராஜ ஐயர் (ஸ்டேஷன் மாஸ்டர் என்றும் N.N.ராஜன் என்றும் குறிப்பிடப்படுபவர்) 1935 ல் தனது 29 ஆவது வயதில் பகவானிடம் வந்தவர். முதல் பார்வையிலேயே பகவான் அவர் மனதில் அழுந்தப் பதிந்து விட்டதால் திருவண்ணாமலை ரயில்வே ஸ்டேஷனுக்கு மாற்றல் வேண்டி மனுக் கொடுத்தார். அற்புதம் என்று எண்ணத்தூண்டும் வகையில் சீக்கிரமே அவருக்கு மாற்றலும் கிடைத்தது. விரும்பியது கிடைத்ததும், ‘டியூட்டி’ யில்லாத சமயங்களிளெல்லாம், ஆச்ரமத்துக்கு வந்து பகவான் சன்னிதியில் அமர்ந்து விடுவார். உணர்ச்சிப் பெருக்கில் அவருடைய கண்களில் நீர் திரளும். எனினும் அவருடைய ரமண பக்தியோ, ஆன்மீக முயற்சிகளோ, அவருடையக் குடும்பக் கடமைகளையும், தொழிலையும் பாதிக்கவில்லை. உண்மையில் அவர் மனைவி கமலா அவரை விட தீவிர பக்தையானாள். குழந்தைகளும் அன்பு வலையில் அகப்பட்டவர்களே. வேலை நாட்களில் ஆச்ரமத்தில் சற்று தாமதமாகி விட்டால், பகவானே, ‘ஸ்டேஷனுக்கு நேரமகிறதே என்று நினைவு படுத்தும். தன் அடியார்கள் தங்கள் கடமைகளில் வழுவாமல், அவற்றைக் குறித்த நேரத்திலும், பொறுப்பாகவும் நிறைவேற்ற வேண்டும் என்பது பகவானின் ஆதேசமாக இதைக் கொள்ளலாம் அல்லவா! N.N.ராஜன் சுறுசுறுப்பாக ஆசிரமத்துக்கு அடிக்கடி வரும் பொழுதெல்லாம் கிரி பிரதக்ஷிணம் செய்வார். ஒரு சமயம் ஆச்ரமத்தில் தங்கியபொழுது பகவானின் பெருமையை ஆசைதீர என்னிடம் சொல்லி மகிழ்ந்தார்.

“நாம் அதை வெறும் மரியாதைக்காகவோ, வேறு எதனாலோ ‘பகவான்’ என்று அழைக்கவில்லை. பிறப்பிறப்பின் ஆதியும், அந்தமும் அறிந்தவன் எவனோ எல்லோரிலும் எவன் ‘தன்னை’க் காண்கின்றானோ, ஆனந்த மயமான சுத்த சத்துவத்தில் எவன் திடமாக நிலைத்து நிற்கிறானோ, அவனே பகவான், அவன் மாத்திரமே பகவான். பேச்சில்

நாம் பகவானை ‘அது’ என்று குறிப்பிடுகிறோம். ஏனெனின் ஜீவன் முத்தனான பரமஞானி ‘தத்துவமசி’ என்ற மகா வாக்கியத்தின் பொருளாகும். பகவான் நம்முடன் அமர்ந்து உண்டு உறங்கி இருந்தாலும் அது பரம்பொருளே மனித உருத்தாங்கி நம்மிடையே உலவுகிறது.

இதை நாம் மறுக்கக்கூடாது. அதன் வாழ்வு சுத்த தெய்வீக இன்னிசை. சொல்லனைத்தும் பளிங்கெனப் பரிசுத்தமும் குற்றமற்ற பூரணமானவை. சதா ஆன்மாவிலேயே கலந்திருப்பதால் அதன் சந்நிதியில் சாந்தியும், ஆனந்தமும் அழகுடன் நிலவும். பகவான் தன்னை ‘பணிலேனிவாடு’

(வேலையற்றவன்) என்று விளையாட்டாகக் குறிப்பிட்டாலும், அதன் செயல் ஒவ்வொன்றும் பழுதற்றதும், துல்லியமாக, நுட்பமாக, முழுமை பெறும். சமையலோ, புத்தகம் பைண்ட் செய்வதோ, கைத்தடி செய்வதோ, புரூப் திருத்துவதோ எதுவானாலும் லவலேசமும் அதில் குறை இருக்காது. பக்தர்கள் பொருத்தமாக பகவானை ‘அது’ என்று குறிப்பிட்டாலும், பகவான் தன்னை எளிமையாக சகஜமாக எல்லோரையும் போல் நான் செய்தேன், வந்தேன், அமர்ந்தேன் என்று தான் சொல்வது வழக்கம். இதிலும் சமத்துவம். பார்வைக்கு நம்மைப்போல் தோன்றினாலும் பகவான் ஞானி மட்டுமல்ல. சகஜ நிஷ்டர், இயற்கையாக சாஸ்வத நிலையில் உறையும் பரப்பிரம வஸ்து அதுவே!

நமாே ரமணா

நன்றி சர்வக்ஞ ரமணன்

May be a black-and-white image of 2 people and temple

All reactions:

11

One Comment on “ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய/வே. கணேசன்”

Comments are closed.