
- சாலையில் பாதுகாப்பு
சரியாக இல்லை
வேலையில் பதவி
உயர்வும் இல்லை
காலையில் நடைப்பயிற்சி இல்லை எனினும்
நிம்மதியாய் வாழ வேண்டும்.
2. பூங்காவில் தூய
காற்று வீசும்
ரீங்காரம் இடும்
வண்டும் நேசம்
ஆங்காரம் நீங்கி
அமைதி பேசும்
நிம்மதியாக வாழ வேண்டும்.
3. வட்டி கட்டி வீடு கட்டி
பட்டி தொட்டி
பதவி மாறி
முட்டி மோதி
உயர்வு பெற்று
நிம்மதியாய் வாழ வேண்டும்.

மாலையில்
காற்றும் இல்லை
சோலையில்
குருவிகளும் இல்லை
மலைகளில்
குளிர்ச்சியும் இல்லை
கலையுலக பாட்டில்
ராகமும் இல்லை
என் செய்வேன்
வாழத்தான் வேண்டும்
மனிதர்களே