ஏற்றுக தீபம்!


ஆர்க்கே

அன்பை அகலமாக்கி
அகலுக்குள் நிரப்புங்கள்-
ததும்பத் ததும்ப.

இதய அடுக்குகளில்
தொடர்புத் திரிதனை
இழைத்திணையுங்கள்.

வாழ்வின் எல்லா திசைகளிலும்
மனதின் பிரதிநிதித்துவத்தை
அகல்களாக்கி அறிமுகப்படுத்துங்கள்.

ஆயிற்று-
ஒளிமயமான மானுடத்திற்கான
நேச அகல்ஜொலிப்பின்
முன் தயாரிப்புகள்.

ஒரு புன்னகையை
சட்டென முகத்தில் பொருத்தி
சந்தோஷத்தின் சுடரை
தொடர்புத் திரி நுனியில்
ஏற்றி வையுங்கள்.

துவங்க வேண்டியதுதான் இனி–

அங்கிங்கெனாதபடி எங்கும்
அன்பின் தத்தளிப்பில்
இதயங்களின் வெளிமுழுதும்
புன்னகையின் ஒளிச்சுடரில்
மகிழ்ச்சியின் மத்தாப்புகள்
சிதறிப் பரவி —
இனிதான உலகு
என்றென்றும் இனிதாகும் நாட்களின்
தீப ஆவளிகள்.
இனிய தீபாவளி வாழ்த்துகள்.

One Comment on “ஏற்றுக தீபம்!”

Comments are closed.