முண்டகோபநிஷதம் தெரிவோம்/எஸ்ஸார்சி

அத்யாயம் 3. பகுதி 1.

1.இணைபிரியா இரு பறவைகள்
ஒரு மரத்தில் வாழ்ந்தன.
ஒரு பறவை இனிய கனியை உண்கிறது.
மற்றொன்று கனியை உண்னாமல்
அதனை வேடிக்கை மட்டுமே பார்க்கிறது

  1. அதே மரத்தில்

அமர்ந்திருக்கும் ஜீவாத்மா எனும் பறவை
அறியாமையால் மயங்கி
யாரும் உதவவில்லை என வருந்துகிறது..
தன்னை அடுத்துள்ள
எல்லோராலும் வணக்கத்திற்குரிய
ஒளிர் தலைவனை நோக்க
அது துயரத்திலிருந்து விடுபடுகிறது.

3.அப்படித் தங்க நிறமான
படைப்புக்கடவுளை
புருஷனை பிரம்மாவுடைய
மூலத்தை தரிசிக்கும்
ஜீவாத்மா ஞானியாகி
நல்வினை தீவினை இரண்டும் துறந்து
மாசற்ற உயரிய
சம நிலையைப் பெறுகிறான்.

4.அனைத்து உயிர்களிலும்
ஒளிரும் கடவுள்
அந்த ப்பிராணனே.
இப்படி அறிந்த ஞானி
எதனையும் பேசமாட்டான்.
தன்னுள் விசாரித்து
தன்னுள் மகிழ்ந்து
தன் பணி செய்து
பிர்மத்தை அறிந்தவர்களுள்
பேராளன் ஆகிறான்.

  1. உண்மையை கைக்கொண்டு
    தவம் செய்து நல் ஞானத்தோடு
    இன்பங்களிலிருந்து தூரமாகி நிற்பவன்
    ஆத்மாவைக்கண்கிறான்.
    இப்படிப் பாவம் தொலைத்தவன்
    காண்பதுவே தூயதும்
    ஒளிர்வதுமான உடலுள் உறையும் ஆன்மா.
  2. வாய்மையே வெல்லும்
    பொய்மை அல்ல.
    உண்மையே தேவ பாதையை திறந்துவிடும்.
    ஆசையை வென்ற ஞானிகள்
    அவ்வழியே செல்கிறார்கள்
    வாய்மை வதிகின்ற உயரிய இடம் அதுவே.

7.அந்தப்பிரம்மம் ஒளிர்வது
அகண்டது புனிதமானது
புரிந்துகொள்ள முடியாதது.
நுண்ணியதினும் நுண்ணியது
தூரத்திற்கு வெகு அப்பாலும்,
வெகு வெகு அருகிலும்
ஞானியின் இதயத்துள்ளும் உறைவது.

  1. கண்களால் காணமுடியாது
    பேசிப்பெற்றுவிடமுடியாது
    மற்ற புலன்களால் உணரமுடியாது
    தவத்தால் பெறமுடியாது
    நற்செயல்களால் அடையமுடியாது.
    மனித மனம் அமைதியான
    அறிவொளியால் தூய்மையாகி
    காணமுடியாத பிரம்மத்தை க்காண்கிறது.
  2. நுணுக்கமான ஆன்மாவை
    மனம் இந்த உடலுள் உறைவதாய் அறிகிறது.
    ஐந்து மடிப்புள்ள பிராணன்
    உடலுள் நுழைகிறது.
    எல்லா உயிரினங்களின் மனதிலும்
    பிராணன் வதிகிறது
    மனம் அது தூய்மையாக ஆன்மா ஒளிர்கிறது.
  3. தூய்மையான மனமுள்ளவன்
    உலகை வெல்கிறான்
    மன விருப்பங்களை அடைகிறான்
    ஒவ்வொருவனும்
    ஆன்மாவை அறிந்தவனை
    வணங்க மகிழ்வெய்துகிறான்.