
1) வீதியில் விடாது குறைக்கின்றன நாய்கள்.
இரவு உணவு இன்றும் இல்லை
தினம் இதே கதைதான்…மீண்டு
நிம்மதியாய் வாழ வேண்டும்.
2) என்னை நன்றாக அடித்து துவைத்துவிட்டு…
அவன் வெளியில் சென்றுவிட்டான் கோபமாக…
சிறையை உடைக்க என்ன வழி…?
நிம்மதியாய் வாழ வேண்டும்.
3)கவலை இல்லாத உலகம் இருக்கிறதா…?
கடவுள் அருகில் இருந்தாலும்
கவலைதான்…
நிம்மதியின் அளவுகோல் எது…?இருந்தாலும்…
நிம்மதியாய் வாழ வேண்டும்.
4) இமயத்தின் உச்சியைக் கண்டு களிக்கலாம்….
ஆனால் வாழ முடியாது ஒருபோதும்….
கைஅளவைப் பொருத்ததுதான் அள்ளுவதும்…ஆனாலும்…
நிம்மதியாய் வாழ வேண்டும்.
5) என்மனம் துரத்துகிறது தெருநாயாய் தினந்தோறும்…
இளைப்பாற இடமில்லை கவித்துவமாய் வாழ்ந்தாலும்…
கவிதை எழுதுவதை விட்டு விடலாம்…
நிம்மதியாய் வாழ வேண்டும்.
♦.
