அவரவர் பங்கு/எஸ் வி வேணுகோபாலன்


யாரோடோ
எதற்கோ
கோபித்துக் கொண்டது மாதிரி
விரைகிறது ரயில்
குரலெடுக்கிறது உச்சத்தில்

உறுமலும் பொருமலும்
எடுத்துக் கொண்டு போகிறது காற்று
எட்டு திக்குக்கும்

திடீர் என்று தணித்துக் கொள்கிறது கோபம்

குழந்தை போல்
துள்ளாட்டம் சமயத்தில்

ஒரு வழியாக இரைச்சல் அடங்கிப்
பெருமூச்சு விட்டபடி
சென்றடைகிறது பெருஞ்சந்திப்பு ஒன்றை

கோபம் துக்கம் கொண்டாட்டம் எல்லாம்
தமக்குள்
பங்கு போட்டபடி
இறங்கிப் போகிறது
சனம்.

                     ***

12 Comments on “அவரவர் பங்கு/எஸ் வி வேணுகோபாலன்”

  1. பொதுவாக கோபத்தை இரயில் மூலம் வெளிப்படுத்தி உள்ளீர்கள்.
    சமூக மாற்றம் குறித்து சனங்களின் கோபம் தான் இப்போது முக்கியம்.

Comments are closed.