
ஒரு குவளை தண்ணீரைக் கவிழ்த்தான்
மற்றொரு குவளையில்
அந்த குவளை நிரம்பியது
மறுபடி அந்த நிரம்பிய
குவளையை முதல் குவளையில்
கொட்டினான் கீழே சிதறாமல்
இப்படியே மறுபடி மறுபடி
செய்து கொண்டே இருந்தான்
திருப்தி தரவேயில்லை
நேரம் மட்டும் போனது
பொழுது போக வேண்டாமா?
அவனுக்கு வேரென்ன
வேலை இருக்கிறது?.
21/07/2023 9ஆம் நிகழ்வில் வாசித்த கவிதை
