
நான் ஒரு மரப்பாச்சி வீரன்
உங்களுக்கில்லை
மனைவிக்கு
ஆடாமல் அசையாமல்
மனைவி செல்லுமிடம்
சென்று கொண்டிருப்பேன்
நில் என்றால் நிற்பேன்
உட்கார் என்றால் உட்காருவேன்
சில சங்கடமான
இடங்களுக்குப் போகும்போது
என் தூக்கம் கெடுகிறது
நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன்
ஆனால்
நான்தான் மரப்பாச்சி வீரனாயிற்றே?
அதுவும் மனைவி
சொல்படி கேட்பவன் ஆயிற்றே
