கேள்விக்காரன் கவிதைகள்

எந்த கவியரங்கிலும் எனக்கு என்ன சொல் கிடைப்பதேயில்லை !

எந்த சொற்களிலும் என் உணர்வு பதிவாவதேயில்லை!

எந்த பாட்டிலும் எனக்கான ராகம் இல்லை!

எந்த வானிலும் எனக்கான நட்சத்திரங்களும் இல்லை !

என் கவிதையை
எனக்கே
எனக்கான
ஒரு சொல்லை
ஐந்தாம் திசையில் எட்டாம் கடலில்
ஏதோ ஒரு திசையில் தேடிக் கொண்டேதான் இருக்கிறேன்

அலுப்பு களைப்பிலா
தேடும் தீரா பயணம்..


21/07/2023