
1) உண்மையாய் உனக்கு நான்யார் அன்பே!
கேட்டால் சிரிக்கிறாய்
எதுவும் சொல்லாமலே…
சின்னவயதில் நீயென்னை
எப்படிக் கூப்பிடுவாய்…
ஏ…மரப்பாச்சி பொம்மை.
2) நெற்றித் தழும்மை
தடவிப் பார்க்கிறாய்….
அது நீகொடுத்த பரிசென்கிறேன்…திகை
க்கிறாய்….
முத்தமிட முயன்றேன்…திமிறி
அடித்தாய்…
அது…மரப்பாச்சி பொம்மை.

3) கால ஓட்டத்தில் எல்லாம்
மாறிவிட்டது…
செப்புவைத்து விளையாடும்
விளையாட்டு இன்றில்லை…
என்காலத்தில் எனக்கு வாய்த்தது கைஒடிந்த…
ஒரு….மரப்பாச்சி பொம்மை.
4) மண்டை உடைந்து இரத்தம்
கசிகிறது…
எதைவைத்து நீயென்னைக் கோபத்தில் அடித்தாயோ…
அதைஉரசி பத்துப் போடுகிறாய்…அம்மா..
மருந்தாய் மரப்பாச்சிப் பொம்மை.
5) மரப்பாச்சி மரப்பாச்சி
என்று கூப்பிட்டவள்தான்…
இன்று சென்னை அழகியாம்
வேடிக்கையாயில்லை…
காலம் யாருக்கும் எதனையும்
வைத்திருக்கும்….
அழகி…மரப்பாச்சி பொம்மை.
♦.

மிகவும் அருமை