
செம்மர மரப்பாச்சி
சோடி ஒன்றும்..
கருங்காலி மரப்பாச்சி
சோடி ஒன்றும்;
உலாப்போகும்
திருவீதி உலா
வருடா வருடம்
பத்தே நாட்கள்.
பள பள சட்டை
பட்டில் தலைப்பாகை;
கருக்கரிவாள் போல்
முறுக்கிய மீசை;
ராசாதி ராசரை என்றும்,
பிரியாமல் இருக்கும்;
பேரரசிகளும் பெருமிதமாய்,
பதவிசாய், கொலுவிருப்பர்;
ஆயினும், அவர்களுக்கே
முதல் தாம்பூலம்!
பொம்மையாய் இருந்தாலும்;
அரசர்க்கு உரிய
அனுபோகம் அவருடையதே;
வேறு எவர்க்கு?
