
1)கொலுவை அலங்கரிக்கும் பொம்மைகள் பல
நிச்சயமாக அவை சீதாராமனாக இருக்கலாம்
நிச்சயமாக அவை ராதேகிருஷ்ணனாக இருக்கலாம்
மரப்பாச்சியில் பால்யத்தின் சுவடுகள்!
2)கொலுவில் கண்கள் ஒன்றைத் தேடுகிறது
வசீகரிக்கும் அழகிய பொம்மைகள் நடுவில்
திருஷ்டி பரிகாரம் போல் அமர்ந்திருந்தாலும்
பால்யத்தின் நெடி ஸ்பரிசமெங்கும்!
3)மெத்தையோடு ஒட்டிக் கொண்டு டெடி
கால்களில் சக்கரம் வைத்த டக்
முன்னும் பின்னும் ஆடும் ஹார்ஸ்
குச்சிக்கால்களுடன் மரப்பாச்சி பொம்மை!

” பால்யத்தின் சுவடுகள்… அருமை