எஸ். சண்முகம் கவிதை

மேசையில் நெடுநாளுக்கு முன்
வாசித்த புத்தகத்தின்
அப்பக்கம்
எதுவென புரட்டி ஓய்ந்ததும்

முன்அட்டையும் – பின் அட்டையும்
ஒன்றாக மாறியிருந்தன
தலைப்புக்கும் எழுதியவருக்கும் நடுவே
ஒரு புள்ளியாய் சிந்தையற்ற ஒரு நொடி
மறையத் தொடங்கியது

வான் வெறித்தலின் புள்ளி
எல்லையின்மையாகி விரிந்து கொண்டே செல்வதைத் தவிர்க்க
வேறுபக்கம் திரும்பும் தருணம்தான்
அப்பக்கம்.