மாடு ஏன் வாலை ஆட்டுகிறது..?/அனங்கன்


1)சிலகேள்விகள் வாழ்வின் தன்மையிலிருந்து விலக்கிவைக்கிறது…
இயற்கையில் எதுவுமே இயல்புதான் மிகையில்லை…
மாடு வாலையாட்டும் காரணம்
தேடியலைய ….
நமக்கு நிறைய நேரமிருக்கிறது.

2) உயிரினங்கள் அதனதன் இருப்பில் வாழ்க்கின்றன…
இன்பதுன்பத்தை அவை கூறுபோட்டுப் பார்ப்பதில்லை.
இறையிடம் வேண்டுதல்களையும் தூக்கி
அலைவதில்லை…
மாடு வாலையாட்டுவது இயல்பானது.

3) ஆயர்பாடியில் அனைத்து
மாடுகளும் வாலையாட்டுகின்றன..
கண்ணனின் புல்லாங்குழல்
அவற்றை ஒருங்கிணைக்கிறது…
கன்றுகளுக்கான பால் மடியில்
தழும்பிநிற்கிறது….
கோபியர்கள் இன்னும் துயிலெலவில்லை.

4)
மாட்டு மூக்கின் முனைமுதல்
வால்வரை…
எங்கும் ஈக்களின் பேரரசு மொய்க்கின்றது…
எட்டும் வரை ஈயோட்ட வாலிருக்கிறது…
முகத்தில் மொய்ப்பதை என்னசெய்யும்….?

5)கவிதை மிகவும் மலிந்துவிட்டது….கவிஞனைப்போல…
மாட்டின் வாலசைய கவிதை
வருகிறது…
இலக்கியம் வளர்க்க சாணி
அள்ளலாம்…
மாட்டின்வால் சவுக்காய் மாறுமோ….?


♦.