மரப்பாச்சி வாழ்வு/ரத்னாவெங்கட்

வார்த்தைகளில்லை
வாக்கு வாதங்களுமில்லை
ஏதொன்றும் எதிர்பார்ப்பில்லை
எதற்கும் தலையாட்டுவதில்லை
இணைந்தே இருந்தாலும்
இடையோடும் தனித்துவம்
குறுக்கிட்டுக் குழப்புவதில்லை
So…
குறைகளும் காண்பதில்லை
நான் அரசன் நீ அரசி
உனது ராஜ்ஜியத்தில்
நீ பேரரசி நான் பிரஜை
எனது ராஜ்ஜியத்தில்
அத்தனை எளிதாய்
செதுக்கப்பட்ட அழகு
இந்த மரப்பாச்சி வாழ்வு

One Comment on “மரப்பாச்சி வாழ்வு/ரத்னாவெங்கட்”

Comments are closed.