கல்யாண்ஜி கவிதை

ஒற்றைக் கள்ளப் பருந்து
சுற்றிக் கொண்டே இருந்தது.
வானம் அழகாக இருந்தது.
சிறு பொழுதில்
கள்ளப் பருந்தைக் காணோம்
வானம் இப்போதும் அழகாகவே இருந்தது.
அழகு என்பது சற்று நேரக் கள்ளம்.
சற்று நேரக் கள்ளமின்மை.

One Comment on “கல்யாண்ஜி கவிதை”

Comments are closed.