வசீகரித்தல்-ழான் புத்ரியா/ முபீன் 

ழான் புத்ரியா, வசீகரித்தல் என்ற ஒரு நூலை எழுதியிருக்கிறார். அதில் வசீகரித்தல் என்பது அதிகாரத்தின் ஒரு வகை என்கிறார். ஏனெனில் வசீகரித்தல் மூலம் உண்மையுடன் விளையாட நாம் அனுமதிக்கப்படுகிறோம் என்கிறார் ழான் புத்ரியா. பிம்பங்கள், பாவனைகள் ஊடாக நாம் பார்க்கும் போது அவற்றுக்குக் கீழ் உள்ள உண்மையை நாம் புரிந்துகொள்கிறோம் என்கிறார் புத்ரியா.

வசீகரித்தல் மீது தீர்மானிக்கப்பட்ட ஊழ்வினை நிறைக்கிறது. மதத்திற்கு தீமையின் வசீகரித்தல் என்பது ஓர் உத்தி. அது பில்லிசூனியமாகவும் இருக்கலாம் பேரன்பாகவும் இருக்கலாம். எனவே அது எப்போதும் தீமையை வசீகரிப்பதாகவோ உலகத்தை வசீகரிப்பதாகவோ இருக்கும். அறத்திலும் தத்துவத்திலும் அதன் சாபம் மாறவில்லை. இன்று அது உளவியலில் ’ஆசையின் விடுதலை’ என்று தொடர்கிறது.

இன்றைய பாலியல், தீமை, வக்கிரம் போன்றவற்றை முன்னெடுப்பதும் சாபமிடப்பட்டு புறந்தள்ளப்பட்டவைகள் கொண்டாடப்படுவதும் நிழலிலிருந்த வசீகரித்தலை முன்னணிக்கு நிலையாக இருக்கும்படி எடுத்து வந்திருக்கிறது.

18ஆம் நூற்றாண்டு வசீகரித்தல் குறித்து பேசுகிறது. அது மேல்மட்டத்தில் உயிர்ப்புடன் இருந்ததைக் கூறுகிறது. பூர்ஷ்வா புரட்சி இந்த உயிர்ப்பை முடித்துவைத்தது. பூர்ஷ்வா காலகட்டம் இயற்கைக்கும் உற்பத்திக்கும் முழுமையாக உரித்தானது. வசீகரித்தலுக்கு எதிரானவற்றிற்கு முன்னுரிமை அளித்தது.

பாலியல் எழுச்சி ஃபூக்கோ குறிப்பிட்ட படி உற்பத்தியின் செயல்பாட்டின் மூலம் நடந்ததால் வசீகரித்தல் மறைந்திருந்தது. இன்று கடந்த காலத்தின் இயற்கையின் நன்மையை அல்லது இயற்கையின் நல்ல பொருளியல் தன்மையை போன்ற எல்லா வகையான இயற்கையையும் முன்னிலைப்படுத்த நாம் முனைகிறோம். ஆனால் வசீகரித்தல் இயற்கையின் எந்தப் படிநிலைக்குள்ளும் வருவதில்லை. ஆனால் குறிகளிலும் சடங்குகளிலும் அது உள்ளது. எனவே எல்லா வகையான உற்பத்தியும் விளக்கங்களும் வசீகரித்தலை விடுப்பதில்லை.

#ழான்புத்ரியா

May be an image of 1 person

All reactions:

16இரா.விஜயன், Nijanthan Nijanthan and 14 others