
வசீகரம் இறையின் எல்லா ஒழுங்கையும் உற்பத்தி, விருப்பம் என்ற ஒழுங்கின் பகுதிகளையும் அழிப்பதற்குக் காத்திருக்கிறது. தீமை, சூழ்ச்சி, உண்மையிலிருந்து விலகும் சூனியம், தவறாகப் பயன்படுத்தப்படும் குறிகள், சதி செய்யப் பயன்படுத்தப்படும் குறிகள் போன்ற எல்லாவற்றிலும் வசீகரம் தோன்றுகிறது.
இந்த இடத்தில்தான் வசீகரமும் பெண்மையும் இணைந்து குழப்பமடைகின்றன, சிக்கலடைகின்றன. ஆண்மை எப்போதும் பெண்மையின் இந்த வகையான மீளுருவாக்கத்தைக் கண்டு அதிர்ச்சி அடைகிறது.
வசீகரமும் பெண்மையும் பாலியல், பொருளாம்சம், அதிகாரம் என்ற தவிர்க்க முடியாத மாற்றுப் பக்கத்தைக் கொண்டிருக்கின்றன. இறுதித் தீர்வுகளைத் தரும் காலகட்டத்தில் நுழைந்தால் பாலியல் புரட்சி அப்போது நடக்கிறது.
அதில் வரம்புக்குட்பட்ட மறைமுகமான இன்பங்களின் உற்பத்தியாகவும் கையாளுதலாகவும், விருப்பத்தின் நுட்பமான பதனப்படுத்தலாகவும் இருப்பதோடு பெண் தன்னைப் பெண்ணாகவும் பாலியலாகவும் உற்பத்தி செய்வதே இறுதி அவதாரமாகக் கொள்ளப்படுகிறது.
அதுவே வசீகரத்தின் முடிவாகிறது. அல்லது மென்மையான வசீகரத்தின் வெற்றி என்பது பெண்மையை விடுத்த எல்லா உறவுகளையும் சிற்றின்பங்களாக சமூக அண்டத்தில் வைக்கப்படும் என்று பொருள்படுவதாகிறது.
#ழான்புத்ரியா

All reactions:
8Nijanthan Nijanthan, Lakshmi Chitoor Subramaniam and 6 others
4
1
Like
Comment
Share
