
(1)
யந்திர வாழ்க்கையின் நிரந்தர கீதம்.
ஆனந்த வாழ்க்கையின் ஆதார கீதம்
தினம் தினம் நான் சுவாசிக்கும்.
சுதந்திர காற்றின் ராகம்.
(2)
யந்திர வாழ்க்கையின் நிரந்தர கீதம்
அன்றாடம் நாம்பயின்றிடும் ஆதாயம்
தேடா, மனித நேயம் வென்றிடும்;
அது எந்நாளும் சிறப்புடன்.
(3)
யந்திர வாழ்க்கையின் நிரந்தர கீதம்.
மந்திர கீதம் அது ஒன்றே!
ஓயாத உழைப்பில் சாயாத நம்பிக்கை!
மாய தந்திரம் அதுவே.
(4)
யந்திர வாழ்க்கையின் நிரந்தர கீதம்.
அனுதினமும் புதிதாக ஒன்றை கற்க
தரும் அது புது வேகம்.
அதுவே உமை செலுத்தும்
(5)
யந்திர வாழ்க்கையின் நிரந்தர கீதம்.
மனைவி மக்களின் ஆனந்தம்; அதற்கு
பணசெலவு ஒன்றும் இல்லை; மனம்
மட்டும் போதும் மனமகிழ.
28-7-2023
