
ஒளி சுடரில்
மஞ்சள் பறவை
துடித்துக் கொண்டிருந்தது
அதன் துடிப்பில்
பச்சைபுடவையில்
ஞானாம்பிக்கை
ஒளிரத் தொடங்கினாள்
மெய் உருகி
நிற்கும் அனைவருக்குள்ளும்
அவ்வருள் விரவிப் பரவி
நாம மழையாய் பொழிகின்றோம்
இனிதாய்
ஆடி வெள்ளியில்
அவரவர் வானத்தில்
முளைக்கின்றன
வெள்ளிகள்.
