
1)இயந்திர வாழ்க்கையின்
நிரந்தரக் கீதம்….
பிச்சைக்காரனின் வாய்மொழியில் வருகிறது அபசுரமாய்…
நீளும் கரத்தில் எதுவும் விழவில்லை…
கீதம்மட்டும் தவறாமல் ஒலிக்கிறது.
2) இயந்திர வாழ்க்கையின்
நிரந்தரக் கீதம்….
உலகத்தை ஒன்றிணைக்கும்
பசியின் வடிவில்…
நாடுகள் எதுவானாலும் காட்சி
ஒன்றுதான்….
இரக்கத்தை இரந்து பெறுவது.
3) இயந்திர வாழ்க்கையின்
நிரந்தரக் கீதம்….
அடிபம்புக் குழாயில் காலையில் தொடங்கிவிடும்…
சொற்களை மென்பைப் படுத்தும் வழக்கமில்லை….
அலாரம் தேவையில்லை அனுதினமும்.
4) இயந்திர வாழ்க்கையின் நிரந்தரக் கீதம்….
பத்தலை பத்தலை பத்தலை பத்தலை….
அவரவர் ஆசையின் அளவுகோல் முடிவற்றது….
முடிவிற்குப் பின் முடியும்.
5) இயந்திர வாழ்க்கையின்
நிரந்தரக் கீதம்….
கவிதைகள் விற்பதில்லையென்ற கவலையுடன் தொடங்கட்டும்…
என்பா எல்லோரும் எழுதிவிட்டால் போதுமே….
கவிதை கிடக்கிறது கழுதை.
♦

என்பா முதல் நான்கும் என்னை வெகுவாக ஈர்த்தது
ஐந்தாவதில் என்மனம் சற்றே முரண் படுகிறது
சொற்கள் கருகி வர என்பா நல்லதொரு களமாகக் காண்க.
இயந்திர வாழ்க்கை வதை,கையில் காசு விழுவதில்லை மற்றும் பத்தலை வதை