
நேற்றுவரை
இருப்பது போல்
இருந்து வந்தான்
இன்றவன்
இல்லவேயில்லை.
“மகராசன் ! ஐயோ !
போய் மறைந்தான்
என அவனை
அறியாதாரும்
தவியாய்
தவிக்கின்றார்.
இன்றுவரை
இல்லாதது போல்
இருந்து வருகின்றேன்
நேற்று நான்
இல்லவேயில்லை.
“நடைப்பிணம் ! சீச்சீ!
நடமாடிக் திரிகின்றான்”
என என்னை
அறிந்தோறும்
நகையாய்
நகைக்கின்றார்
