மாண்டுக்யோ உபநிடதம் தெரிவோம் -எஸ்ஸார்சி

1.ஓம், கடவுளர்களே,
புனிதமானவற்றை
எமது செவிகள் கேட்பதாக,
வணங்குவற்குத் தகுதியானவர்கள் தாங்கள்,
புனிதமானவற்றை யாம் காண்போமாக,
எங்களுக்கு கடவுளால்
பணிக்கப்பட்ட வாழ்வுகாலம்
யாம் வாழ்வோமாக,
வலுவானகைகால்கள் கொண்ட
உடலோடு உம்மை வாழ்த்துகிறோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

2.இங்கு அனைத்துமே பிரம்மம், உயர்ந்த சுயம் பிரம்மமே.
இந்த ஆத்மாவுக்கு நான்கு பகுதிகள்.

  1. முதல் கால் -வைஸ்வ நரா, விழிப்பு நிலை, புறப்பொருள் பற்றிய நினைவு, 7 கால்கள் limbs, 19 வாய்கள், இதன்படி புறப்பொருள்களை அனுபவிக்கின்றான்

.

ஏழு limbs

                  1. சொர்க்கம் –தலை
                  2. சூரிய சந்திரன் – கண்கள்
                  3.காற்று – மூச்சு
                  4.அக்னி –வாய்
                  5.ஆகாயம்- உடல்
                  6.நீர்- சிறு நீரகம்- உறுப்பு
                  7. பூமி- கால் 

வாய்கள் 19

ஞானேந்திரியம் -5 கர்மேந்திரியம்-5 பிராணன் -5 அந்தகரணம் -4
(மெய் வாய் கண் மூக்கு செவி -5
வாய் இருகைகள் பிறப்புறுப்பு குதம்- 5
பிராண அபான சமானா வ்யானா உதானா-5
மனசு புத்தி சித்தம் அகங்காரம்-4)

  1. இரண்டாவது கால் (quarter) என்பது தைஜசா . கனவு நிலை. உள்ளுறுப்புக்களைப்பற்றிய நினைவிருக்கும். ஏழு கால்கள் பத்தொன்பது வாய்கள் உடையது அது. நுண் பொருட்களை உணர வல்லது.
  2. மூன்றாவது கால்- நிலை. சுஷுப்தி ஆழ்ந்த உறக்கம். அனைத்து அனுபவங்களும் ஒன்றாகி ஆனந்தத்தை அனுபவிக்கும். ஞான நிலைக்கு இட்டுச்செல்வது இது.
  3. அனைத்திற்கும் தலைவன், அனைத்தும் அறிந்தோன், அக நிர்வாகி,காரண கர்த்தா, அனைத்திற்கும்தொடக்கமும் முடிவும் அது.
  4. நான்காவது காலான துரியம்

அக புற உலகங்கள் என்னும்

இரண்டும் பற்றி
உணர்வில்லாதது என்று
ஞானிகள் நினைக்கிறார்கள்

அறிவின் மொத்தத்தை சிறிய உணர்வை
ஜடப்பொருள் பற்றிய
உணர்வை அறியாதது.
அதனைக்காண முடியாது,
அது தொடர்பற்றது,
புரிந்துகொள்ள முடியாதது,
வரையறுக்க முடியாதது,
நினைக்க முடியாதது,
வர்ணிக்கமுடியாதது,
வரையறுக்கப்பட்ட
உலக கட்டுப்பட்டிற்குள்
வாராத தொடர்பில்லாத
சுயத்தின் உச்சபட்ச

உணர்வு நிலை அது.

  1. ஆத்மா என்பது ஓம்காரம் அது ஓம். அதன் பகுதிகள்.
    பிரிவுகள் அதன் கால்கள் –quarters.
    அதன் கால்கள் அதன் பிரிவுகள்.

ஓம் என்பதன் பிரிவுகள் அ உ ம A U M.

  1. வைஸ்வநரா முதல் பிரிவு அ விழிப்பு நிலை அனைத்திலும் உறைந்து அனைத்திலும் முதன்மையாய் இருப்பது.
  2. தைஜசா என்பது கனவு நிலை ஓம் என்பதில் உ என்ற இரண்டாம் எழுத்தால் அறியப்படுவது. உயர்ந்ததாய் நடு நாயகமாயிருப்பது. இதை அறிந்தவன் அனைவர்க்கும் இணையோன் அனைத்தும் அறிந்தவன். அவன் குடும்பத்தில் பிரம்மத்தை அறியாதவர்கள் ஜனிப்பதில்லை.
  3. பிரக்ஞையின் ஆழ்ந்த உறக்கமே ம ஓம் என்பதின் மூன்றாவது பாகம். மூன்றாவது அளவு அது. அனைத்தும் ஒன்றாவது இங்கு. இதை அறிந்தவன் அனைத்தையும் அளப்பான். அனைத்தையும் அறிவான். அவன் சுயத்தால் இவை இயலும்.

12.அளவுக்குள் வாரா ஒன்று நான்காவது. ஆழ் நிலையானது. காரண இருப்பின் சார்பு நிலைகொண்டது, ஆனந்தமயமானது, இரு பிரிவற்றது, அதுவே ஓம்காரம். இதை அறிந்தவனின் ஆன்மா பேரான்மாவோடு ஒன்றிணைந்துவிடுகிறது.