வண்ணங்களின் இசை தீபாவளி


எஸ் வி வேணுகோபாலன்

பற்றுகிறது

பட்ட இடமெல்லாம்!


தொட்ட இடமெல்லாம்

தொடர்ந்து செல்கிறது!


இருளின் ஊடே 

பரவும் தீப ஒளி

வேக வேகமாக

நம்பிக்கை 

பற்ற வைத்துப்

பரபரப்பாக்குகிறது


புற உலகின்

வெளிச்சத்தைக்

கொஞ்சம்

அகவுலகில் கொண்டு

பற்ற வைக்கிறது


தள்ளி நின்று பார்த்துச்

சிதறும் வண்ணங்களின்

ஒலிக்குக்

காத்திருந்து 

அடுத்த வெளிச்ச ஓசையை

நோக்கி நகர்த்துகிறது


பார்த்துக் கொண்டே கடந்து போகும் ஒன்று தான்

பண்டிகை ஏதானாலும்

இன்னும் பலருக்கு!


எல்லோரையும்

பங்கேற்க வைக்கும்

திருநாளின் ஒளியில்

வண்ணங்கள் கூடி இருக்கும்!

ஓசையின் மொழியில்

இசை தூக்கலாயிருக்கும்!
                        ****

8 Comments on “வண்ணங்களின் இசை தீபாவளி”

  1. தீப வரிசை தீபாவளி
    காலையில் கங்கா ஸ்நானம்
    புத்தாடை அணிந்து
    இறைவனை வணங்கி
    பெரியோர் ஆசிபெற்று
    உறவுகள் நண்பர்களுக்கு வாழ்த்து
    பலகாரம் வகைகள் உண்டு
    சிறப்பான அறுவை உணவு
    அடிதடி வெடிகள்
    அமைதி மத்தாப்பு
    மறக்காத நினைவுகளாய்
    நெஞ்சோடு பதிவாகும் தீபாவளி
    அன்றும் இன்றும் உற்சாகம் மாறவில்லை

    எஸ் வீ ராகவன் சென்னை
    அலைபேசி 9940227555

  2. சிறப்பான கவிதை. எல்லோருக்குமான கொண்டாட்டம் என்று வரும்? அந்த நாளை நோக்கி பயணிப்போம்.

  3. பற்றுகிறது
    சங்கு சக்கரம்
    சுற்றுகிறது
    பற்றுகிறது
    சர வெடிகளாய்
    தொற்றுகிறது
    பற்றுகிறது
    பயந்து சிறார்
    கற்றுகிறது
    பற்றுகிறது
    உறவும் நட்பும்
    ஒற்றுகிறது
    பற்று வற்றுகிறது
    பொருட்கள் கடையில்
    விற்றுகிறது
    இத்துடன் கவி
    முற்றுகிறது…

    கருக்கொடுத்து
    தூண்டிய
    எஸ். வி.வி –க்கு
    நன்றி!

  4. “பார்த்துக் கொண்டே கடந்து போகும் ஒன்று தான்

    பண்டிகை ஏதானாலும்

    இன்னும் பலருக்கு!”

    அருமை👏👏

    மாறும் காலம் எக்காலம்??

Comments are closed.