தீபாவளி நல்வாழ்த்து


கு.மா.பா.திருநாவுக்கரசு

எண்ணெயும் திரியும் மறைவதில் அன்றோ
எரிதழல் சுடராய் ஒளிரும்!
மண்ணிலும் மருந்திலும் மடிபவர் சிலரால்
மத்தாப்புகளும் மலரும்!
ஒன்றின் அழிவினில்
ஒன்று மகிழ்வது
பண்டிகையானது சரியா?
இருளை ஒளியால் அகற்றுவதாலே,
இருளை ஒதுக்குதல் முறையா?
ஒளியின் மறுபுறம் இருளே! என்று

உணர்ந்தால் உள்ளொளி பெருகும்!
வலியும் வதமும் நீங்க – மனமே
வலியச்சென்று உதவும்!
நலிந்தவர் மனங்களும் நலம்பெற இந்த
தீபாவளியில் மகிழும்!

முகநூல் நண்பர்களின்
இல்லமெங்கும் இன்பம் பெருக
எல்லாரும் எல்லாமும் பெற
என் இனிய நல்வாழ்த்துகள்!