கல்யாண்ஜி கவிதை

81 வயதில் இறந்துவிட்ட ஒரு சின்னம்மையின்
துக்கம் விசாரிக்கப் போயிருந்தேன்.
94 வயதில் தனியாக நடந்து வந்து
துக்கம் பகிர்ந்து கொண்ட
ஒரு பெரியவரின் பாதம் தொட்டு
வணங்க வாய்த்தது.
ஒன்று மட்டும் அல்ல.
எப்போதும் இன்னொன்றும் நிகழ்கிறது.
%
மீள்