ஆடிப்பெருக்கு/வே.கல்யாணகுமார்


*
அன்பைப் பெருக்கு..அகழ்விளக்கின் திரியைத் தூண்டி அருட்சோதிப் பெருக்கு!

அறிவைப் பெருக்கு.. ஆழ்ந்து பயின்று அகம்திறந்து அறநெறிகள் பெருக்கு!

ஆடிப்பெருக்கு! திருநாளில் அகன்ற காவிரியாய் ஞானம் பெருக்கு! ஞாலத்தில் அமைதியைப் பெருக்கு!

பாடிப் பெருக்கு.. பைந்தமிழ் தாயின் திருவடியை தேடிப் பெருக்கு! தேன் கவிதைப் பெருக்கு!

நல்லதே நடக்குமென உள்மனதில் நினைவைப் பெருக்கு! நிம்மதியைப் பெருக்கு! நீடுலகில் நீடுவாழ ஆரோக்யம் பெருக்கு!

சொல்லும் சொல்லில் சுவையைப் பெருக்கு! செல்லும் பாதையிலே சத்தியத்தைப் பெருக்கு! சமாதானம் பெருக்கு!

இல்லையென ஏங்காது எழுந்து உழைத்து வெற்றியினைப் பெருக்கு! வெளிச்சத்தைப் பெருக்கு! விடியலாய் தோன்றியதே ஆடிப் பெருக்கு!

எல்லோரும் நம்மவரே என்கின்ற நட்பைப் பெருக்கு! நல்லதையே பெருக்கு! சொல்லெல்லாம் செயலாக.. வியர்வைப் பெருக்கு! சமுதாய வீதிப் பெருக்கு! சமத்துவம் வரும் நாளைத் தேடிப் பெருக்கு! இது.. ஆடிப்பெருக்கு!


.