மூன்று ஹைக்கூ/பி.ஆர்.கிரிஜா

  1. மரம் நடு விழா;
    தலைமை தாங்கினார்
    விறகு வியாபாரி !


2. சட்டையில் மலர் வாடியதே,

உன் நெஞ்சில் ஈரப் பசை

இல்லையோ?

3. சேற்றிலே பிறந்ததை
கையிலெடுத்தேன்
பூவுக்கும் வந்ததொரு புது வாழ்வு !