ஹைக்கூ கவிதைகள்/ம.சக்திவேலாயுதம்

வாசலில் காவலாளி…
வீட்டிற்குள் நாய்
முரண்பாட்டுடன் வாழ்க்கை!


எல்லோரும் மன்னர்கள்…
எல்லோரும் தெய்வங்கள்…
ஐந்தாண்டுக்கு ஒருமுறை!


அட்சரேகை..தீர்க்க ரேகை..
நாடுகளின் ஆயுள் ரேகை..
மூன்றாம் உலகப்போர்!


சுட்டெரிக்கும் வெயில்
குடைக்குள் காதலர்கள்
முத்த மழை!


வளர்ப்புப் பூனை…
குறுக்கே ஓடியது
தகர்ந்தது சகுனம்