ஆஹா ஆந்தையாரே.!/வே.கல்யாணகுமார்


முட்டமுட்ட கண்ணைவிட்டு ஆந்தையாரே..
முழிச்சு முழிச்சு பார்க்குறீரே ஆந்தையாரே..
நட்டநடு இரவினிலும்
ஆந்தையாரே..
நாட்டுக் காவல் புரியுறீரோ ஆந்தையாரே..

பட்டப்பகல் திருடனெல்லாம் இரவினிலே பதுக்குறான்..
எட்டுத் திக்கும்
இரவெல்லாம் பார்த்திருப்பீர்
ஆந்தையாரே.!
ஒட்டுமொத்தப்
பறவையினத்துள்
உமதுவிழிகள்
ஆந்தையாரே.!
சுட்டும்விழிச்
சுடரொளியோ
சொல்லிடுவீர்
ஆந்தையாரே.!

கூகையென்று
இலக்கியததார் கொண்டாடும் ஆந்தையாரே..
கோலவிழிக்
கொண்டவரே..
கொடுமிரவில்
ஆந்தையாரே..
வாகைசூடும் வலசைபோகும்
வாத்தியாரே..
ஆந்தையாரே!

விழிப்பூட்ட இருட்டினிலே விளக்கு ஏற்றி பறப்பீரோ!
வழியெங்கும் வறுமையுற்றோர் உறங்கவில்லை ஆந்தையாரே!
எழில்மிகுந்த பறவைகளில்.. முழிப்பிதுங்கி
உலவுகின்றீர்..
என்சொல்வேன்?
ஆந்தையாரே.. எங்களைப்போல்
ஆந்தையாரே.!