
குழந்தையாயிருக்கையில்-
“தூக்கி வச்சுக்கோப்பா” என்பாய்
பிஞ்சுக்கர வருடலாய்.
சற்றுக்கழித்து
“எறக்கி விடுப்பா என்னை”யென
தளிர்க் கரத்தால் காலரிழுப்பாய்.
காலமிங்கு வளர்த்துன்னை
மனுஷியாக்கிய ரசவாதத்தில்
இன்று-
உன்னைத்தூக்கி கொள்ளும்
தெம்பு குன்றி
இறக்கிவிட்டுவிட மனமும் இன்றி
நினைப்பில் நிரந்தரமாய்
இருத்தி வைத்தபடியே
தேவதையாய் வந்திறங்கிய மகளையே
வியந்தபடியிருப்பேன்-
ஏழேழு பிறவிக்கும்…!

ஆஹா! என் அப்பாவை நினைவூட்டும் நல்ல ஒரு கவிதை.
தந்தை மட்டுமா இறக்கி விட மனமின்றி……மகளும் தானே( அப்பாவின் நினைவுகளை….) என்ன ஒரு உறவு… இற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும்….மட்டுமல்ல…அதையும் தாண்டி….அப்பா…அப்பா ….அப்பா…….