பிரமிள் கவிதை


குமிழிகள்
இன்னும்
உடையாத ஒரு
நீர்க்குமிழி
நதியில் ஜீவிக்க
நழுவுகிறது.
கைப்பிடியளவு
கடலாய் இதழ்விரிய உடைகிறது
மலர் மொக்கு.